பதிவு செய்த நாள்
20
மே
2014
12:05
நத்தம் : நத்தம் பகுதியில் வறட்சி நீங்கி மழை பொழிந்து, பொதுமக்கள் நன்மை பெற கைலாசநாதர் கோயிலில் வருணயாகபூஜை நடந்தது. நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில், மேலத்தெரு, கீழத்தெரு, அக்ரஹாரம், கொண்டையம்பட்டி பகுதி மக்கள் சார்பாக வருணயாக பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு செண்பகவள்ளியம்மன் கைலாசநாதர் சுவாமிகளுக்கும், நந்திபகவான், விநாயகர், முருகன், பைரவர் மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகளும் நடந்தது.