அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை அருகே உலக நன்மைக்காக இரண்டு கைகளிலும் அக்னி சட்டிகளை ஏந்தி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் கோவில்புரையூர் கிராமத்தில் தித்திக்கொல்லை வேடியப்பன் கோவிலில் உலக நன்மை மற்றும் பொதுமக்களின் பிணிகள் தீர அக்னி சட்டி ஏந்தும் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. கோவில் பூசாரி வேடி 2 கைகளிலும் அக்னி சட்டிகளை ஏந்தி கோவிலை 15 முறை வலம் வந்தார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.