மனிதனுக்கு துணிவு இருக்க வேண்டும். ஆனால், அறியாமை, கோபம் ஆகிய குணங்கள் இருக்கக்கூடாது என்பதை உணர்த்தவே, சிவன் நக்கீரரை எரித்தார். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? என்ற வாதத்திற்காக, செண்பகப்பாண்டியனின் சபைக்கு வந்த சிவனிடம், நக்கீரர் அப்படி மனமில்லை என வாதம் செய்தார். இறைவிக்கு மட்டும் உண்டு என்று சிவன் மனிதர்களின் தலையை முகர்ந்து பார்த்து மணமிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், தெய்வத்தின் நிலையை அவரால் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அறியாமல் எதற்கும் பதில் சொல்லக்கூடாது என்பதை அவர் உணர்த்துகிறார். அத்தோடு நில்லாமல், சிவனிடம் கோபத்துடன் பேசினார். ஒருவன் சொல்லும் கருத்து உண்மையே ஆயினும் கூட, சாந்தமாகச் சொன்னால் அங்கே சண்டைக்கு இடமில்லை. நக்கீரரோ தன் கருத்தை ருசிப்படுத்த கோபத்துடன் பேசியதால், ஆணவத்தை அழிக்க சிவன் அவரை தண்டித்தார். பின்னர் பாண்டியனின் பக்தியையும், பணிவையும் மெச்சி நக்கீரருக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.