கோவில்பட்டி: வீரவாஞ்சி நகர் சங்கரேஸ்வரி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கோயில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கும்பம் எழுந்தருளல், கோபுரங்களுக்கு புனிதநீர் அபிஷேகம், அதனைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர், ஸ்ரீவள்ளி தேவ சேனா சமேத கல்யாண முருகர், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகதளுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.