கும்மிடிப்பூண்டி: பெருவாயல் கங்கையம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அருகே, பெருவாயல் கிராமத்தில் உள்ளது கங்கையம்மன் கோவில். ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். திருவிழாவின் தொடக்கமாக நேற்று முன்தினம், சிறப்பு அபிஷேக ஆராதனை, கூழ் வார்த்தல் போன்ற நிகழ்வுகள் நடந்தன. அன்று இரவு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிறைவு நாளான நேற்று, பகலில், அம்மன் திருவீதி உலாவும், மாலையில் உறியடி நிகழ்வும் நடந்தன. திருவிழாவில், பெருவாயல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு விழா குழுவினர் சார்பில், சென்னை – கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், 15 அடி உயரத்தில் கங்கையம்மனின் பிரமாண்ட திருஉருவ சிலை வைக்கப்பட்டிருந்தது.