பதிவு செய்த நாள்
23
மே
2014
12:05
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் பாதம் காக்கும் வகையில், புதிய தரைவிரிப்புகள் நேற்று விரிக்கப்பட்டிருந்தன. பூலோக வைகுண்டம், 108 வைனவத் திருத்தலங்களில் முதன்மையானது என பெயர் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதம்தோறும், 50 லட்சம் ரூபாய் வரை உண்டியல் காணிக்கையாக வருமானம் வருகிறது. ஆனால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இக்கோவில் மிகப்பெரிய பிரகாரம் கொண்டது. கோடை காலத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதம் காக்க வசதியாக, பிரகாரத்தில் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டிருக்கும். ஆனால், சில நாட்களுக்கு முன், தரைவிரிப்புகள் விரிக்கப்படாமல், மூளையில் சுருட்டி வைத்திருப்பதாக நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, புத்தம் புதிய தரைவிரிப்புகள் கோவில் பிரகாரத்தில் நேற்று விரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.