இளையான்குடி: சாலைக்கிராமம் அருகே உள்ள , சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். இக்கோயிலில் மே16 அன்று காப்புகட்டுதலுடன் திருவிழா துவுங்கியது . மே 22ல் பூத்தட்டு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 9 மணிக்கு சாத்தமங்கலம் விநாயகர் கோயிலில் இருந்து , விழாக்குழு தலைவர் தனசேகரன் தலைமையில் பக்தர்கள் பால்காவடி , ரதக்காவடி, பறவைக்காவடி , மயில்காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர் . அவர்கள் கோயில் முன் அமைந்துள்ள பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி செலுத்தினர் . பகல் 12 மணிக்கு அன்னதானம் , இரவு மகா உற்சவம் , கலை நிகழ்ச்சி நடந்தது. நாளை அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் பொங்கல் வைத்து , கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.