காரைக்குடி, கொப்புடையம்மன் கோயிலில், செவ்வாய் திருவிழா, மே 13 அன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில் அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடும், பக்தி உலாவும், மண்டகப்படி தீபாராதனையும், வாகன ஊர்வலமும் நடந்தது. மே19 அன்று, முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நடைபெற்றது. திருவிழாவையொட்டி நேற்று தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.