தில்லைக்காளி கோவில் திருவிழா சிதம்பரத்தில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2014 12:05
சிதம்பரம்: தில்லைக்காளியம்மன் கோவில் வைகாசிப் பெருவிழாவையொட்டி சிதம்பரத்தில் தேரோட்டம் நேற்று நடந்தது. சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் வைகாசிப் பெருவிழா கடந்த 19ம் தேதி துவங்கியது. தினமும் தில்லைக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு தீபாராதனைகள், வீதியுலா நடக்கிறது. 9ம் நாள் உற்சவமான திருத்தேரோட்டம் நேற்று மதியம் நடந்தது. இதனையொட்டி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் புறப்பாடு செய்து திருத்தேரில் எழுந்தருளினார். தேரில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டு 12 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. தில்லைக்காளியம்மன் கீழவீதி, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இரவு 7 மணிக்கு காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரத அவரோகனம் செய்யப்பட்டு சன்னதிக்கு வந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் பூஜைதாரர்கள், அலுவலர்கள் செய்தனர்.