குன்னூர் : குன்னூர் சின்ன வண்டிச்சோலை தேவி கருமாரியம்மன் கோவிலில் 109வது ஆண்டு கரக உற்சவ விழா நடந்தது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூகுண்டம் இறங்கினர். தொடர்ந்து நடந்த உரியடி உற்சவ விழாவில், மலையப்பன் காட்டேஜ், சின்னவண்டிச்சோலை, எம்.எச்., பேரட்டி, கம்பிசோலை, பாரத்நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற விவேக் என்பவருக்கு பணமுடிப்பு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. நேற்று மஞ்சள்நீராடல், மறுபூஜையுடன் விழா நிறைவு பெற்றது.