பதிவு செய்த நாள்
30
மே
2014
02:05
சிவகாசி : நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்றதை தொடர்ந்து, அவரது பணி சிறக்க, சிவகாசி புனித லூர்து மாதா ஆலயத்தில், சிறப்பு திருப்பலி நடந்தது. சிவகாசி தேரடி திடலில், சிவகாசி நகர தலைவர் பழனிச்சாமி தலைமையில், பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கினர். நகர பொது செயலாளர் அரிகேசவன், துணை த்தலைவர்கள் ஆறுமுகம், நடராஜ், பொருளாளர் பொன்ராஜ், நகர செயலாளர் குருநாதன் கலந்து கொண்டனர்
* ஒன்றிய பா.ஜ., சார்பில் செங்கமலநாச்சியார்புரம், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், மீனம்பட்டி, பள்ளபட்டி, கொத்தனேரி, செவலூர், கட்டளைபட்டியில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட தலைவர் பார்த்த சாரதி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர் தங்கராஜன், ஒன்றிய தலைவர் விஜயராகவன் கலந்து கொண்டனர்.
* சிறுபான்மை அணியின் சார்பில், மோடியின் பணி சிறக்க, சிவகாசி கத்தோலிக்க கிறிஸ்தவ புனித லூர்து மாதா தேவாலயத்தில், சிறப்பு திருப்பலி நடந்தது. சிறுபான்மை அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஜோசப், நகர தலைவர் பழனிச்சாமி கலந்து கொண்டனர்.