திருப்புத்தூர் : திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா நிறைவடைந்தது.மே 20ல் பூமாயிஅம்மனுக்கு பூச்சொரிதல் விழாவிற்கு அடுத்து, அன்று மாலை கொடியேற்றி, காப்புக்கட்டப்பட்டது.பத்து நாள் உற்சவமாக,வசந்தப் பெருவிழா துவங்கியது அன்று இரவு, உற்சவர் அம்மன், சர்வ அலங்காரத்தில் கோயில் குளத்தை வலம் வந்தார். தொடர்ந்து, தினசரி இரவில் அம்பாள் புறப்பாடு நடந்தது. எட்டாம் நாள் திருநாளாக பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று, பத்தாம் திருநாளாக,அம்பாள் புறப்பாடு நடந்தது. மாலை, பெண்கள்,கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.