பதிவு செய்த நாள்
30
மே
2014
02:05
கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் வீரபத்திரகாளியம்மன் கோவிலில், நிகும்பலா யாகம் நடந்தது. யுனெஸ்கோ புகழ் பெற்ற தாராசும் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு அருகில், பத்ரகாளியம்மன் உடனுறை வீரபத்திரசுவாமி கோவில் உள்ளது. 1,400 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோவில், வீரசைவ மடத்தின் நிர்வாகத்திற்குட்பட்டது. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், வீரபத்திரகாளியம்மனுக்கு நிகும்பலா யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு, வீரபத்திரகாளியம்மனை தரிசனம் செய்தால், மாங்கல்யதடை, குழந்தை பேரின்மை, குடும்ப பிரச்னைகள் அகலும் என்பது ஐதீகம். அமாவாசை தினத்தில் பிற்பகல், 3 மணி முதல் மாலை, 5 மணி வரை யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, வீரமாகாளியம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.