பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
01:06
கடம்பத்துார் : வெண்மனம்புதுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், வரும் 4ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட வெண்மனம்புதுார் கிராமம், அன்னை இந்திரா நகரில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், 4ம் தேதி காலை 6:00 மணி முதல், 7:30 மணிக்குள் நடைபெற உள்ளது.இன்று, காலை 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. தொடர்ந்து கணபதி ஹோம், தன பூஜை, புதிய சிலைகளுக்கு கிரிவலம் வருதல் போன்றவையும், பின், பகல் 12:00 மணிக்கு, விசேஷ திரவ்யாஹூதியும், மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டுதலும், முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெறும்.
நாள் நேரம் நிகழ்ச்சி
ஜூன் 3 காலை 9:00 புதிய சிலைகளுக்கு கண் திறத்தல், மாலை 5:00 நாடி சந்தானம்
ஜூன் 4 காலை 7:05 விமான கும்பாபிஷேகம் காலை 7:15 அங்காளபரமேஸ்வரி அம்மன் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் காலை 7:30 மகா தீபாராதனை.