ஊத்துக்கோட்டை : வீரஆஞ்சநேயர் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். பென்னலுார்பேட்டை அடுத்த, வெலமகண்டிகை கிராமத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.இதில் வெலமகண்டிகை, பென்னலுார்பேட்டை ஆகிய கிராமங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட ஆண்கள், சிறுவர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என, பக்தியுடன் கோஷமிட்டனர்.