பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
01:06
மந்தாரக்குப்பம்: நெய்வேலி தவ முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனையொட்டி, 30ம் தேதி விடியற்காலை மகா கணபதி ஹோமம், மாலை 4:30 மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, முதல்கால பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் காலை இரண்டாம்கால பூஜையும், மாலை மூன்றாம் கால பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யந்திர பிம்ப ஸ்தாபனம், நாடி சந்தானம் நடந்தது. நேற்று காலை நான்காம் கால பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை மற்றும் யாத்ரா தானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 8:45 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடக்கிறது. விழாவில், என்.எல்.சி., சேர்மன் சுரேந்திரமோகன், தமிழக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் தனவேல், இயக்குனர்கள் ராஜகோபால், ரவீந்தர்நாத், செயல் இயக்குனர் இளம்பரிதி, முதன்மை பொது மேலாளர்கள் முத்து, சக்கரவர்த்தி, பொது மேலாளர் ராமலிங்கம், உயர் அதிகாரிகள் தியாகராஜன், நாகராஜன், டாக்டர் சுப்ரமணியன், விழாக் குழுவினர் சிவசுப்ரமணியன், பழனி, செல்வராஜ், வெங்கடேசன், ஜோதி, தில்லை ஹோண்டா உரிமையாளர் சிவசெந்தில்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.