பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
01:06
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அருகே, வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.ஊத்துக்கோட்டை அடுத்த, தும்பாக்கம் கிராமத்தில் உள்ளது, ராதா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி கோவில். இக்கோவில், சிதிலமடைந்து இருந்தது. கிராம மக்கள் பங்களிப்புடன் கோவில் சீரமைப்பு பணி நடந்தது. நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது.இதையொட்டி கடந்த, 30ம் தேதி மாலை, விக்கிரகங்கள் கரிகோலம் வருதல், அனுக்ஞை, பகவத்பிராத்தனை, பிரதான ஹோம ஆரம்பம் ஆகிய நிகழ்ச்சிகளும், மறுநாள், 31ம் தேதி புண்யாகவாசனம், யாகசாலை திருவாராதனம், மகா சாந்தி திருமஞ்சனம்நடந்தது.நேற்று காலை, கோ பூஜை, யாகசாலை திருவாராதனம், மகா பூர்ணஹூதி, யாத்ரா தானம், கலச புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளும், இதைத் தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு கருட வாகனத்தில் பஜனையுடன், உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.