பொல்லாப்பிள்ளையார் கோவிலில் 108 குத்துவிளக்கு சிறப்பு பூஜைகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2014 12:06
சிதம்பரம்: திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவிலில் நம்பியாண்டார் நம்பிகள் குரு பூஜையையொட்டி 108 குத்துவிளக்கு பூஜைகள் நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த திருநாரையூர் பிரசித்திப் பெற்ற பொல்லாப்பிள்ளையார் கோவிலில் நம்பியாண்டார் நம்பிகள் குரு பூஜை விழா நேற்று முன்தினம் பொல்லாப்பிள்ளையார் சன்னதியில் நடந்தது. இதனையொட்டி அன்று காலை சிவபூஜகர்கள் சிவபூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடந்தது. இதனைதொடர்ந்து பொல்லாப்பிள்ளையார், நம்பியாண்டார் நம்பிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை, ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தது. பின்னர் நம்பியாண்டார் நம்பிகள் சுவாமிக்கு மகேஸ்வர பூஜை, சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 குத்துவிளக்கு பூஜை சன்னதியில் நடந்தது. இதனையொட்டி பொல்லாப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள், தீபாராதனைகள் நடந்தது. பொல்லாப்பிள்ளையார் சன்னதியில் சிதம்பரம் வெங்கடேச தீட்சிதர் தலைமையில் 108 திருவிளக்குப் பூஜை நடந்தது. சுமங்கலி பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு பொல்லாப்பிள்ளையர் மற்றும் நம்பியாண்டார் நம்பிகள் சுவாமிகள் திருவீதி புறப்பாடு செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.