பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
12:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கிழக்கு ராஜகோபுரத்திற்கு, 27 லட்சம் ரூபாயில் திருப்பணிகள் நடைபெற உள்ளன. இங்கு அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக, 1.5 கோடி ரூபாய் செலவில், மூன்றாம் பிரகாரம் தூண்கள், சுதைகளில் பல வண்ண பெயின்ட் பூசப்பட்டுள்ளது. அவை, பளிச் என, ஜொலிக்கின்றன. சுவாமி, அம்மன் சன்னிதி தூண்கள், சிற்பங்கள் பழமை மாறாதபடி, ரசாயனம் கலந்த வார்னிஷ் பூசும் பணி, சேதுபதி மண்டபம், திருக்கல்யாண மண்டபம் சீரமைப்பு ஆகிய பணிகளும் நடந்து வருகின்றன. இதையடுத்து, 27 லட்சம் ரூபாய் செலவில், 126 அடி உயர கோவில் கிழக்கு ராஜகோபுரத்தை சீரமைக்கும் பணிக்கான பூஜை, கிழக்கு கோபுரம் நுழைவு வாசலில், நேற்று நடந்தது.