பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
01:06
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மழை நீர் சேகரிப்பு மையங்கள் அமைப்பதற்கான பணிகள் நேற்று துவங்கின. கோயில் வளாகம் மற்றும் கோயிலுக்கு சொந்தமான 25 கட்டடங்களில் மழை நீர் சேகரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. துவக்க விழாவில் மேயர் ராஜன் செல்லப்பா, எம்,எல்.ஏ., முத்துராமலிங்கம், துணை மேயர் திரவியம், கவுன்சிலர்கள் முனியாண்டி, முத்துக்குமார், உதவி பொறியாளர் குழந்தைவேலு, துணை பொறியாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.துணை கமிஷனர் பச்சையப்பன் கூறுகையில், சரவண பொய்கை, தெப்பக்குளம், லட்சுமி தீர்த்தத்திற்குள் மழைநீர் செல்லும் வகையில் அந்தந்த பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் சீரமைத்தும் புதிய பாதை அமைக்கப்பட உள்ளது, என்றார்.