நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2014 01:06
சேத்தூர்: தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி,கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தினமும் சுவாமி ம் அம்பாள், பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.இரவில் பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது.விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 10 தேதி காலையில் நடைபெறுகிறது. ஏற்பாடை அறங்காவலர் துரைராஜசேகர், செயல் அலுவலர் ராமராஜா மற்றும் ஊழியர்கள் செய்கின்றனர்.