பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
01:06
பவானி: கும்பாபிஷேகத்தில் பிரதானமாக கருதபடும் கோபுர கலசங்கள், முலாம் பூசப்பட்டு, கோவிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷே விழா, வரும், ஒன்பதாம் தேதி காலை, ஆறு முதல், 7.30 மணிக்குள் நடக்க உள்ளது. இதற்காக, பல்வேறு பணிகள், இரவு, பகலாக நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், ராஜகோபுரம், கிழக்கு, தெற்கு ராஜ கோபுரம், சங்கமேஸ்வரர், வேதநாயகி, பெருமாள் சன்னதி உட்பட, பல இடங்களில் உள்ள கலசங்கள், ராட்சத இயந்திரம் மூலம், பத்திரமாக அகற்றப்பட்டது. அவற்றை சுத்தம் செய்து, பழுது நீக்கி, முலாம் பூசும் பணிக்கு, அனுப்பி வைக்கப்பட்டது. இதில், கலசங்களில் நசுங்கி உள்ள பாகங்கள், சரி செய்யப்பட்டு, பாலீஷ் செய்யப்பட்டது. மொத்தமுள்ள, 44 கலசங்களும், கோவிலுக்கு படிப்படியாக வந்து கொண்டு இருக்கிறது. கோவில் நிர்வாகத்தினர் கட்டுப்பாட்டில், கலசங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாளில், அவை, கோபுரங்களில் பொ ருத்தப்பட்டு, கும்பாபிஷேக புனித நீரை ஏற்க தயார்படுத்த உள்ளனர்.