குமரி கோயில்களில் 68 சிறப்பு காவல் படை வீரர்கள் நியமனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2014 12:06
நாகர்கோவில் : குமரி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குனர் ஜெயக்குமார் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்ட கோயில் பாதுகாப்பு சிறப்பு காவல்படையில் 68 காலியிடங்கள் விபரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ள 61 வயதுக்குட்பட்ட திடகாத்திரமான முன்னாள் படை வீரர்கள் னரும் 8.6.2014-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுபவர்களுக்கு 5ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.