பதிவு செய்த நாள்
04
ஜூன்
2014
12:06
கரூர்: கரூர், மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். கரூர், மண்மங்கலம் புதுகாளியம்மன், புதுசங்கிலி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து மகாகணபதி ஹோமம், நவக்ரஹஹோமம், பூர்ணாகுதி, முதற்கால யாகசாலை பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, ஐந்தாம் கால யாகசாலை பூஜை, ஹோமம் துவக்கம், ஸ்பர்சாகுதி, யாத்ராதானம் நடந்தது. புதுகாளியம்மன், புது சங்கிலிகருப்பண்ணசாமி, புதுமாரியம்மன் ஸ்வாமி மற்றும் சகல பரிவார மூர்த்திகளுக்கும் கோவில் கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மஹா அபிஷேகம், மஹாதீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அபெக்ஸ் ஏ டிரேடர்ஸ் அசோக்குமார், தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு அன்னதானம், வாண வேடிக்கை, வீணை கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சி நடந்தன. கும்பிஷேக விழாவில், கரூர், திருச்செங்கோடு, நாமக்கல், ஈரோடு, பரமத்தி வேலூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட் பகுதியை சேர்ந்த, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமை வகித்தார். தர்மகர்த்தா சுப்பிரமணியன், வக்கீல் பரமேஸ்வரன், ஆடிட்டர் கருப்பண்ணன், ஆசி டெக்ஸ்டைல்ஸ் தியாகராஜன், ஓம் சக்தி வீடியோ கனகராஜ், ராம் டிரேடர்ஸ் அன்பரசன், நவரங் ரவிச்சந்திரன், மோகன்குமார், கொங்கு மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.