பதிவு செய்த நாள்
04
ஜூன்
2014
12:06
திருவாரூர் : ஸ்ரீஸ்வயம்ப்ரகாசானந்த சரஸ்வதி சுவாமிகளின், 79வது வார்ஷீக ஆராதனா மகோத்சவம், இன்று துவங்கி, வரும் 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. ஸ்ரீ ஆலங்குடி பெரியவாள் என்ற ஸ்ரீஸ்வயம்ப்ரகாசானந்த சரஸ்வதி சுவாமிகளின், 79வது ஆராதனை உற்சவம், திருவாரூர் மாவட்டம், முடிகொண்டானில் அமைந்துள்ள அவரது அதிஷ்டானத்தில், இன்று இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீமத் பாகவத மகாத்மிய உபன்யாசத்துடன் துவங்குகிறது. வரும், 11ம் தேதி ஆராதனை, திருவுருவ வீதியுலா மற்றும் மங்கள ஆரத்தியுடன், ஆராதனை நிறைவு பெறுகிறது.