இளையான்குடி: தெற்கு கீரனூர் வரத விநாயகர் கோயிலில் ,மண்டலாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் , 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. தெற்கு கீரனூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர் .