விழுப்புரம் பெருமாள் கோவிலில் இன்று பிரம்மோற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2014 12:06
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் இன்று (4ம் தேதி ) பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் இன்று (4ம் தேதி) மாலை பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. இன்று பகவத் அனுக்ஞை, மிருத் சங்கிரனம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடக்கிறது. அம்சவாகனம், சிம்ம வாகனம், அனுமந்த் வாகனம், சேஷ வாகனம், கருட வாகன மகோற்சவம், யானை வாகனத்தில் உற்சவர் காட்சியளிக்கிறார். 11ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு இந்திர விமானத்தில் காட்சியளிக்கிறார். வரும் 13ம் தேதி காலை 8:15 முதல் 9:45 மணிக்குள், மிதுன லக்னத்தில் திருத்தேர் மகோற்சவம் நடக்கிறது. சந்திர பிரபை மற்றும் திருமஞ்சனத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.