பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றின் மறுகரையில் உள்ள, எமனேஸ்வரம் பொன்னால் பூண்முலை உமையாள் சமேத எமனேஸ்வரமுடையவர் கோயில் மகாகும்பாபிஷேகம் ஜூன் 8ல், நடக்கவுள்ளது. எமதர்மராஜன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வணங்கிய இடம், எமனேஸ்வரம், எமனேஸ்வரமுடையவர் கோயில் ஆகும். இக்கோயிலானது பல ஆண்டுக்கு பின் புதுப்பிக்கப்பட்டு, இன்று(ஜூன் 6) காலை 7.30 மணிக்கு நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தியுடன் விழா தொடங்குகிறது. ஜூன் 8ம் தேதி நான்கு கால யாக பூஜை முடிந்து காலை 7.48 முதல் 8.35 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.