திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. ஜூன் 9ல் தேரோட்டம் நடக்கிறது. இக் கோயிலில்,ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்மனும் திருவீதி உலா நடைபெறுகிறது. நேற்று காலை சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேக,ஆராதனை நடந்த பின்னர், உற்சவர் திருவீதி வலம் வந்து, கோயில் வாசலில் எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து சுவாமி,அம்பாள் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர், திருத்தளிநாதரும் சிவகாமி அம்மனும், அபநாய சோழமண்டபத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினர். அடுத்து திருக்கல்யாண வைபவம் நடந்தது.