திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த காந்திகுப்பம் ரேணுகாபரமேஸ்வரி கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலாவும், வரும் 13ம் தேதி மாலை 5:00 மணிக்கு செடல்திருவிழாவும் நடக்கிறது. இதையடுத்து வரும் 14ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.