திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு, திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. கடந்த 1ம் தேதி காலை 10:00 மணிக்கு பகாசூரனுக்கு சாதம் எடுத்தல் நிகழ்ச்சியும், 4ம் தேதி திருகல்யாண உற்சவமும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பகல் 11:00 மணிக்கு பாண்டவர்களின் படுகளம் நிகழ்ச்சி, மாலை 5:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், வேண்டுதலின்பேரில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.