திருப்பரங்குன்றம் கோயில் பிரசாதங்கள் விற்பனை: நிர்வாகம் ஏற்க முடிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2014 01:06
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 1 முதல் பிரசாதங்கள் விற்பனையை நிர்வாகமே மேற்கொள்கிறது. இக்கோயிலில் பிரசாதங்களை தயாரித்து விற்பனை செய்யும் பணி தற்போது தனியாரிடம் உள்ளது. இந்த ஒப்பந்தம் ஜூன் 30ம் தேதியுடன் முடிகிறது. பிரசாதம் விற்பனை குறித்து டெண்டர் விடப்படவில்லை. கோயில் துணை கமிஷனர் பச்சையப்பன் கூறியதாவது: பக்தர்கள் விரும்பும் பிரசாதங்களை தரமானதாகவும் அவர்கள் திருப்தி அடையும் வகையிலும் தயாரித்து கோயில் நிர்வாகமே விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கமிஷனரின் ஒப்புதலுக்கு இந்த முடிவு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பிரசாதங்கள் விற்பனையை கோயில் நிர்வாகமே ஏற்று நடத்தும், என்றார். கோயிலில் காணிக்கை முடி சேகரித்தல் 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய், சரவணப்பொய்கையில் தற்காலிக கடை நடத்த ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய், கோயில் உயிர் பிராணிகள் சேகரித்தலுக்கு ஒரு லட்சத்து மூன்று ரூபாய், ஆஸ்தான மண்டபத்தில் விடலை தேங்காய் சேகரித்தல் 63 ஆயிரம் ரூபாய், மலை மீது காசி விஸ்வநாதர் கோயிலில் தற்காலிக கடை நடத்த 64 ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போனது.காதுகுத்தும் உரிமம் உட்பட சில ஏல வகைகள் தள்ளி வைக்கப்பட்டன.