பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
01:06
பழநி: முருக பெருமானின் மூன்றாம்படை வீடான திருஆவினன்குடி கோயிலில், அன்னதான திட்டம் விரைவில் துவங்க உள்ளது. தமிழகத்தின் முதன்மை ஆன்மிக சுற்றுலா தளமான பழநி மலைக்கோயிலில், தினமும் காலை 8:00 முதல் இரவு 10:00 மணி வரையிலும், பெரியநாயகியம்மன் கோயிலில் உச்சிகால பூஜைக்கு பிறகும், அன்னதானம் வழங்கப்படுகிறது. இதேபோல், அறுபடைவீடுகளில் மூன்றாம்படை வீடான திருஆவினன்குடிகோயிலில் அன்னதான திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தேவையான சமையல் பாத்திரங்கள், தளவாட சாமான்கள் வாங்கப்பட்டுள்ளன. கோயில் அதிகாரிகள் கூறுகையில், "தினமும் உச்சிகால பூஜைக்கு பின், நூறு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். தற்போது, கோயிலில் கும்பாபிஷேகப் பணி நடந்து வருகிறது. தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன், அன்னதான திட்டம் துவங்கப்படும்,” என்றனர்.