பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவிலில் வரும் 10ம் தேதி அரவாணிகள் திருவிழா நடக்கிறது. பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் அரவாணிகள் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான அரவாணிகள் பங்கேற்பர். இந்தாண்டு அரவாணிகள் திருவிழா வரும் 10ம் தேதி நடக்கிறது.அதையொட்டி கடந்த 3ம் தேதி கொடியேற்றப்பட்டது. 6ம் தேதி அர்ச்சுனன் திரவுபதி திருக்கல்யாணமும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. நாளை (8ம் தேதி) மாலை 4:30 மணி முதல் 6:30 மணிக்குள் மாடு பிடி சண்டை நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி கரகாட்டத்துடன் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவான 10ம் தேதி கூத்தாண்டவர் கோவில் முன்பு இரவு அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு வாணவேடிக்கை நடக்கிறது. விழாவில் கொத்தட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்கின்றனர். 11ம் தேதி காலை திருத்தேர் உற்சவமும், மாலை 5:00 மணிக்கு 64 அங்க லட்சணம் பொருந்திய அரவாண்் களப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏற்பாடுகளை சின்னக்குமட்டி, கொத்தட்டை, அத்தியாநல்லூர் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.