வில்லியனுார்: கூடப்பாக்கம் தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலில், நாளை மறுநாள் கருட சேவை நடக்கிறது. வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கத்தில் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மூன்றாம் ஆண்டு வைகாசி விசாக கருட சேவை உற்சவம் 11ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 10:00 மணியளவில் பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனமும், இரவு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ஹரிஹரிநமோநாராயணா, கிராம மக்கள் செய்துவருகின்றனர்.