விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு ஸ்ரீஅபிநவ மந்த்ராலயத்தில் நாளை, வர்தந்தி உற்சவம் மற்றும் அரசு வேம்பு விவாகம் நடக்கிறது. விழாவை யொட்டி காலை 8:00 மணிக்கு அரசு-வேம்பு விவாகமும், 9:00 மணிக்கு ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடக்கிறது. மாலை குருஜி ஸ்ரீ ராகவேந்த்ராச்சாரியார் முன்னிலையில் ஸ்ரீஅரிபஜன், குருவார பஜன்மண்டலி மற்றும் நவநரசிம்ம சத்சங்கம் நடக்கிறது.