பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
03:06
முருக்கேரி: திண்டிவனம் அருகே உள்ள சிறுவாடி ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 2ம் தேதி பந்தகால் நடுதல், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 7ம் தேதி மாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்தசங்கிரஹனம், கங்கை திரட்டல், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு யாத்ராதானம், தீர்த்த கடம் புறப்பாடு, 8: 45 மணிக்கு ஸ்ரீ காளியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 9 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.