பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
03:06
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த சின்னத்தச்சூரில் ஏழு கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சின்னத்தச்சூர் கிராமத்தில் உள்ள சக்கர விநாயகர், சிவா விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, பொன்னி அம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், கங்கையம்மன், நவக்கிரக கோவில்கள் புதுப்பிக்கப்பட்டது. இக்கோவில்களில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 7: 50 மணிக்கு கடம் புறப்பாடும், 8:00 மணிக்கு கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் செங்குந்தர் இளைஞரணி சார்பில் அன் னதானம் வழங்கப்பட்டது. இதில் அ.தி. மு.க., எம்.பி., லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் கலைமதிபன்னீர், மாவட்ட நிர்வாகிகள் பசுபதி, அற்புதவேல், சரவணக்குமார், செல்வா ரமேஷ், மணி பங்கேற்ற னர். விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் ஜெயந்தி ஆனந்தபாஸ்கரன், துணை தலைவர் ரேணுகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.