இரவில் தனியாகச் செல்லும் போது, வீண் கற்பனைகளில் மனதைக் குழப்பிக் கொள்ளாமல் இருந்தாலே பயம் இருக்காது. இந்தக் கலியுகத்தில் மனித சக்தியைத் தவிர வேறெதுவும் நம் கண்களுக்குத் தெரியாது... புரியாது... அவற்றினால் தொந்தரவும் கிடையாது. தைரியமாய் செல்லுங்கள். ரொம்பவே பயமாக இருந்தால், திருஞானசம்பந்தர் பாடிய வேயுறு தோளி பங்கன் என்று துவங்கும் கோளறு பதிகம் பத்துப் பாடல்களைப் பாடிக் கொண்டே சென்றாலே போதுமானது.