பதிவு செய்த நாள்
10
ஜூன்
2014
02:06
சிவகங்கை : சிவகங்கை,விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் தாம்பத்ய தட்சிணாமூர்த்தி சன்னதியில்,குருபெயர்ச்சி விழா, ஜூன் 13ல் நடக்கிறது. சிவகங்கை,பிள்ளைவயல் ஆர்ச் அருகே விஷ்ணுதுர்க்கை அம்மன் கோயிலில், தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு தனி சன்னதி உண்டு. ஜூன் 13 அன்று மாலை 5.57க்கு, மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு செல்கிறார். அன்றைய தினம், தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு, தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு ஹோமம், இரவு 7 மணிக்கு, மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசியினருக்கு, தட்சிணாமூர்த்தி சன்னதியில், பரிகார பூஜைகள் செய்யப்படும். ஏற்பாடுகளை, விஷ்ணு துர்க்கை அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.