பதிவு செய்த நாள்
10
ஜூன்
2014
02:06
சிவகாசி : குருபெயர்ச்சியை யொட்டி, சிவகாசியில் உள்ள பல்வேறு கோயில்களில், 13ம்தேதி மாலை குருபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் அன்று மாலை 5.57 மணிக்கு குருபெயர்ச்சி விழா நடக்கிறது. மேஷம், ரிஷபம், கடக, சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள். குருபெயர்ச்சியை யொட்டி, காலை முதலே பக்தர்கள் அபிஷேக பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வந்து கொடுக்கலாம் என, சிவகாசி சிவன் கோயில் அர்ச்சகர் தங்கராஜ் குருக்கள் தெரிவித்தார். * சிவகாசி அய்யப்பன் கோயிலில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு மாலை 4.30 மணிக்கு யாகம் வளர்ந்து மாலை 6.10 மணிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. பூஜையில் கலந்து கொள்ள விரும்புவோர் கோயில் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. *சிவகாசி சிவசுப்பிரமணியசாமி கோயிலில் , பரிகார ராசிக்காரர்கள், நற்பலன் பெறும் ராசிக்காரர்களுக்கு விசேஷ அர்ச்சனை நடைபெறுகிறது. குடும்ப அர்ச்சனை செய்ய விரும்புவோர், கோயில் அலுவலகத்தில் ரூ.106 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.