பதிவு செய்த நாள்
11
ஜூன்
2014
01:06
புதுச்சேரி: கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலத்தில், காஞ்சி மகான் பரமாச்சாரியாள் ஜெயந்தி விழா நாளை (12ம் தேதி) நடக்கிறது.இதுகுறித்து, சாய் சங்கர பக்த சபாவின் தலைவர் கல்யாணம் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி, கருவடிக்குப்பம், ஓம்சக்தி நகரில், வேதாஸ்ரம குருகுலம் அமைந்துள்ளது. இங்கு, நாளை 12ம் தேதி, சாய் சங்கர பக்த சபா சார்பில், காஞ்சி மகான் பரமாச்சாரியாள் ஜெயந்தி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதையொட்டி, குருகுலத்தில் உள்ள பரமாச்சாரியாளுக்கு, விசேஷ ஆவஹந்தி ஹோமமும் நடக்கிறது. அன்று காலை கோபூஜையும், அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.விழாவில் அனைவரும் கலந்து கொண்டு, பரமாச்சாரியாளின் ஆசி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. மேலும், விபரங்களுக்கு, ராஜா சாஸ்திரியை, 98423-29770, 98423-27791 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.