பதிவு செய்த நாள்
11
ஜூன்
2014
02:06
மண்ணச்சநல்லூர்: உத்தமர் கோவிலில் நடந்த வைகாசி தேர்த்திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிப்பட்டனர். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பிச்சாண்டார் கோவில் கிராமத்தில், 108 திவ்ய தேசங்களில், ஐந்தாவது தேச ஸ்லமாக உத்தமர் கோவில் உள்ளது. இங்கு, வைகாசி மாத தேர்த்திருவிழா கடந்த, 2ம் தேதி காலை, 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் இரவு, 7.30 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி புறப்பாடு நடந்தது. கடந்த, 8ம் தேதி காலை, 10.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 9ம் தேதி காலை, 10 மணிக்கு பிச்சாண்டேஸ்வரர் திருவீதி உலாவும் நடக்கிறது. நேற்று காலை, 8.30 மணிக்கு, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேர் வடம் பிடித்து இழுத்தனர். இன்று (11 ம் தேதி) இரவு, 7.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், நாளை ஆடும் பல்லக்கில் ஸ்வாமி அம்பாள் புறப்பாடும் நடக்கிறது.