பதிவு செய்த நாள்
11
ஜூன்
2014
02:06
பெரம்பலூர்: பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வரும், 13ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், 13ம் தேதி திருஞான சம்மந்தருக்கு சிறப்பு அபிஷேகம், நடத்தப்படுகிறது. பிற்பகல், 3 மணியளவில் பூஜைகளும், தீபாராதனையும் நடக்கிறது. மாலை, 4.30 மணியளவில் மஹா அபிஷேகம், கலச தீர்த்த அபிஷேகமும், மாலை, 5.57 மணியளவில் தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.இங்கு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யப்படுகிறது.