திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருத்தேர் விழா !
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2014 02:06
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருத்தேர் விழாவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 2ம் தேதி முதல் காலை, இரவு தோறும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, திரிபுர சம்ஹாரமூர்த்தி சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. காலை 8:15 மணிக்கு உற்சவர் திரிபுர சம்ஹாரமூர்த்தி திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகள் வழியாக வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு 7:00 மணிக்கு சரநாராயண பெருமாள் சரம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, உற்சவர் சரநாராயண பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.