கடலூர்: கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில் 17 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது. கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியலில் இருந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை மொத்தம் 17 லட்சத்து 93 ஆயிரத்து 859 ரூபாய் கிடைத்தது. இது தவிர 381 கிராம் தங்கமும், 285 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 15ம் இருந்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் வங்கியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் 50 பேர் பங்கேற்றனர்.