நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் திரவுபதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை 12.30 மணிக்கு மாரியம்மனுக்கு பால் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை அம்மன் வீதியுலா, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 9.00 மணிக்கு அர்ஜூனன் – திரவுபதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தீமிதி திருவிழா நாளை 13ம் தேதி மாலை 6.00 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி கார்த்திகேயன் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.