வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதி முருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா நடந்தது. கூமாப்பட்டி பாலசுப்பிரமணியர் கோயிலில் சுவாமி, தேவியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. விபூதி அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நத்தம்பட்டி வழிவிடு முருகன் கோயிலில் விநாயகருக்கும், சுவாமிக்கும் அதிகாலை முதல் அபிஷேகங்கள் துவங்கின. பின்னர் பூஜிக்கப்பட்ட கும்பநீரால் அபிஷேகம் முடிந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. எஸ். ராமச்சந்திரபுரம் பழனியாண்டவர் கோயிலில் சுவாமிக்கு அதிகாலையில் சஷ்டிப்பாராயண வழிபாடு நடந்தது. சிறப்பு அபிஷேகங்களுக்கு பின் சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பல்வகை பூஜைகளும் அன்னதானமும் நடந்தது. சுந்தரபாண்டியம் பாவடித்தோப்பு வடிவேல் முருகன் கோயிலிலும், முக்குரோடு வழிவிடு விநாயகர் கோயிலிலும், வைகுண்டமூர்த்தி அய்யனார் கோயில் சுப்பிரமணியசுவாமி கோயிலிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகளுடன் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.