பரமக்குடி : பரமக்குடி நகர் காட்டுப்பரமக்குடி தூய பதுவை அந்தோணியார் சர்ச் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்கு உதவி தந்தை ஜோஸ்வா வரவேற்றார். வட்டார பங்குத் தந்தை செபஸ்தியான், கொடி ஏற்றினார். நவநாள் திருப்பலி, சிறப்பு வழிபாடு நடந்தது. பரமக்குடி பங்கு தந்தைகளுடன், சிவகங்கை ஜஸ்டின் திரவியம் இணைந்து கூட்டு திருப்பலி நிறைவேற்றினர். தினமும் மாலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில், நவநாள் திருப்பலியும், மறையுறையும், வழிபாடுகளும் நடக்கவுள்ளன. ஜூன் 14 மாலை 6 மணிக்கு அந்தோணியார் தேர்பவனி நடக்கவுள்ளது.