திட்டக்குடி அரங்கநாத பெருமாள் கோவில் தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2014 01:06
திட்டக்குடி: திட்டக்குடி வதிட்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று முன்தினம் மாலை தேர் திருவிழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட பெருமாள் மற்றும் தா யார் திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிராம முக்கியஸ்தர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.